Wednesday, November 1, 2023

நீட் தேர்வு சர்ச்சை ஏன்

 நீட் தேர்வு குறித்த சர்ச்சை பல வருஷமா சுத்திட்டு இருக்கு.

இதுல எனக்கு எந்த கட்சி சார்பும் இல்லை. அதனால இந்த தேர்வு வேண்டுமா வேண்டாமான்னு சொல்றது என்னோட நோக்கம் இல்லை.
நீட் மசோதால ஏன் மாநில அரசு திணறுது அதே நேரத்துல மத்திய அரசு ஏன் தமிழ்நாடு க்கு விலக்கு கொடுக்க முடியாது ன்னு சொல்லுது ன்னு இதுல இருக்கிற இடியாப்ப சிக்கலை விளக்குவது மட்டுமே என் நோக்கம்.
இது ஒரு நடுநிலையான பதிவு.
இந்த பிரச்சினையை மூன்று விதமாக அணுக வேண்டும்.
1. அரசியல் அமைப்பு சட்டம் (254(1)
கல்வி பொதுப்பட்டியலில் வருவதால் மாநில அரசும் சட்டம் இயற்ற முடியும். மத்திய அரசும் இயற்ற முடியும். ஆனால் மத்திய அரசு இயற்றிய ஒரு சட்டத்தின் நிலைப்பாட்டிற்கு எதிராக மாநில அரசு சட்டம் இயற்றும் போது இறுதியில் மத்திய அரசு இயற்றும் சட்டமே செல்லுபடி ஆகும். அதுவே நீட்டில் நடந்துள்ளது. ஆனால் குடியரசுத் தலைவர் மாநில அரசு இயற்றும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தால் அந்த சட்டம் செல்லுபடி ஆகும். இந்த சட்ட விதி தான் மத்திய அரசுக்கு பலமாகவும் தமிழக அரசுக்கு தலைவலியாகவும் உள்ளது.
2. அரசியல் கருத்தியல் மோதல்
மத்தியில் இருக்கும் அரசுக்கு உள்ள கருத்தியலோடு மாநில அரசு கருத்தியல் ஒத்து போகாமல் இருந்தால் இந்த சிக்கலான பிரச்சினை இழுவையாகவே இருக்கும். எந்த முடிவும் எட்டப்படாமால் இறுதி வரை அரசியல் மட்டுமே அங்கே இருக்குமே தவிர தீர்வு எட்டப்படாது. இங்கே இருவருக்கும் சம அதிகாரம் உள்ளது. இருவருமே தத்தம் தங்கள் பலத்தை முயற்சி செய்து கொண்டே தான் இருப்பார்கள். ஏற்கனவே இதற்கு முந்திய அரசும் நீட் க்கு எதிரான மசோதாவை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
3. நுழைவுத் தேர்வு மற்றும் பாடத்திட்டம்
தமிழகத்தில் மருத்துவ மற்றும் பொறியியல் தேர்வுக்கு 1984-85 முதல் 2006 வரை TNPCEE எனும் தமிழ்நாடு தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இருந்த ஒன்று தான். பிளஸ் டூ மதிப்பெண்களோடு இந்த தேர்வின் மதிப்பெண்ணை வைத்து தான் மருத்துவ படிப்புகளுக்கு மட்டும் அல்ல பொறியியல் படிப்புகளுக்கே செல்ல வேண்டிய நிலை இருந்தது. எனவே தமிழ்நாடு க்கு நுழைவுத் தேர்வு ஒன்றும் புதிதல்ல என்பது இரு கழக அரசுகளுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் இப்போது பிரச்சினையே இந்த தேர்வை மத்திய அரசின் NTA அமைப்பு நடத்துவதும் அதன் கேள்விகள் தமிழ்நாடு பாடத்திட்ட அமைப்பில் படிக்கும் மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள முடியமால் இருப்பதால் தமிழ் வழி மாணவர்கள் மட்டும் அல்ல இதே அமைப்பில் ஆங்கில வழி மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆக இந்த பிரச்சினை சட்ட சிக்கல்,சமூக சிக்கல்,அரசியல் சிக்கல் ன்னு மூணு விதமா பின்னிப் பிணைந்து இருப்பதால் ஒவ்வொன்றாக தீர்க்க மத்திய அரசும் சரி,மாநில அரசும் சரி இரு அரசுகளும் இணைந்து போனால் அல்லது இருவரில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்.
எனவே தற்கொலை செய்து கொள்வது, மருத்துவம் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்று நினைத்து வீணாக உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்.
இங்கே “மாநில அரசா ? மத்திய அரசா ? எது பெருசுன்னு அடிச்சு காட்டு ?” ன்னு சொல்றது என் நோக்கம் இல்லை.

நீட் தேர்வு சர்ச்சை ஏன்

  நீட் தேர்வு குறித்த சர்ச்சை பல வருஷமா சுத்திட்டு இருக்கு. இதுல எனக்கு எந்த கட்சி சார்பும் இல்லை. அதனால இந்த தேர்வு வேண்டுமா வேண்டாமான்னு ச...